மேலும் செய்திகள்
ரயில்வே மேம்பாலத்தில் ஒளிராத விளக்குகள்
31-Aug-2024
பண்ருட்டி: பண்ருட்டி ரயில்வே மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.பண்ருட்டி - சென்னை சாலை, ரயில்வே மேம்பாலத்தில் கடந்த சில வாரங்களாக மின்விளக்குகள் எரியவில்லை. இதுகுறித்து அப்பகுதி வியாபாரிகள், பொது மக்கள் நகராட்சியில் புகார் செய்தும், நடவடிக்கை இல்லை. இரவு நேரத்தில் ரயில்வே பாலம் இருண்டு கிடப்பதால், அப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிமகன்கள் சர்வீஸ் சாலையில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் பெண்கள், சிறுவர்கள் அவ்வழியாக செல்ல அச்சமடைகின்றனர். எனவே, மின்விளக்குகளை சீரமைத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
31-Aug-2024