கீழ்மாம்பட்டு பள்ளி ஆண்டு விழா
நடுவீரப்பட்டு, : பண்ருட்டி அடுத்த கீழ்மாம்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில், தமிழ்கூடல் மற்றும் பள்ளி ஆண்டு விழா நடந்தது.தலைமை ஆசிரியர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயராமன், முன்னாள் ஊராட்சி தலைவர் உத்திரகுமரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பெருமாள் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் தங்கவேலு வரவேற்றார். வி.ஏ.ஓ., லலிதா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சீதா, வசந்தகுமாரி ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர்.தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துணை இயக்குனர் அன்பழகன், தமிழ்க்கூடல் மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். சிறுகிராமம் அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பாண்டுரங்கன், காடாம்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் மாசிலாமணி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர், எம்.ஆர்.பி., கேஷ்யூஸ் ரவிச்சந்திரன், உதவி தலைமை ஆசிரியர் அரங்கநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் தாமோதரன் நன்றி கூறினார்.