உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிருஷ்ணசாமி கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்

கிருஷ்ணசாமி கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்

கடலுார்: கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.கிருஷ்ணசாமி கல்வி அறக்கட்டளை தலைவர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கி, முதலாம் ஆண்டு மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரி பங்களிப்புகள் குறித்து விளக்கினார். அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் கணித துறைத்தலைவர் வைரமாணிக்கம் சிறப்புரையாற்றினார். கல்லுாரி செயலர் விஜயகுமார், முதல்வர் இளங்கோ வாழ்த்துரை வழங்கினர்.அப்போது, துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன், முதலாம் ஆண்டு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேராசிரியர் ரமேஷ் மற்றும் மானுடவியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி