உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவிகளுக்கு பாராட்டு

மாணவிகளுக்கு பாராட்டு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை வடக்குப்பாளையம் துாய இருதய மேல்நிலைப்பள்ளியில் தடகள போட்டிகளில் வென்ற மாணவிகளை தாளாளர் மற்றும் ஆசியர்கள் பாராட்டினர்.விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான தடகள போட்டி ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ., பள்ளியில் நடந்தது. போட்டிகளில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பள்ளி மாணவிகள் தட கள போட்டிகளில் பங்கேற்று விளையாடினர். போட்டிகளில் பங்கேற்ற வடக்குப்பாளையம் துாய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 600 மீட்டர் ஓட்டம், 800 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில், ஒன்பதாம் வகுப்பு மாணவி ஜெனிலியா, பத்தாம் வகுப்பு மாணவி மதுமதி, பிளஸ்1 வகுப்பு மேகலா ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் அகஸ்டின், தலைமை ஆசிரியர் தேவராஜன், உடற்கல்வி ஆசிரியர் பெர்ணான்டோ, ஆசிரியர் சுதா ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ