உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின் விளக்கின்றி இருண்டு கிடக்கும் குமாரக்குடி குறுகிய வளைவு பாலம்

மின் விளக்கின்றி இருண்டு கிடக்கும் குமாரக்குடி குறுகிய வளைவு பாலம்

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி குறுகிய வளைவு பாலம் மின் விளக்குகள் இன்றி இருண்டு கிடப்பதால், வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது. சேத்தியாதோப்பில் இருந்து சென்னை-தஞ்சாவூர் இணைக்கும் சாலையில், குமாரக்குடி அருகே வீராணம் ஏரியிலிருந்து வெள்ளாற்றிற்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலில் 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குறுகிய பாலத்தில் போக்குவரத்து நடந்து வருகிறது. குறுகிய பாலம் என்பதால், எதிர் எதிரே வாகனங்கள் செல்ல முடியாது. இப்பாலத்தில் மின்விளக்குகள், ரிப்லெக்டர்களும் இல்லாததால் இரவு நேரத்தில் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் விபத்துக்களில் சிக்கி வருகின்றன. பாலத்தில் வாகனங்கள் மோதி வாய்க்காலில் விழுவதும், அதி வேகமாக வரும் கார்கள் வாய்க்காலில் பாய்ந்து விபத்திற்குள்ளாவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் வாகன விபத்துக்களை தடுக்க பாலத்தின் அருகே மின் விளக்குகள் மற்றும் ரிப்லெக்டர்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !