உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புவனகிரி சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

புவனகிரி சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

புவனகிரி: புவனகிரி பெரியாதவர் வீதி சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. புவனகிரி பெரியாதவர் வீதியில் அமைந்திருக்கும் பழமையான சித்தி விநாயகர் கோவிலில் புதுப்பிக்கப்பட்டது.இக்கோவிலில் மூலவர்களான சித்தி விநாயகர், வள்ளி தேவசேனாவுடன் சுப்ரமணியர், மகாமாரியம்மன், நவநீதக்கிருஷ்ணர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட விக்கரகங்கள் பிரதிஷ்டை செய்தனர். கும்பாபிேஷகத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் காலை.7.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளுடன் விழா துவங்கியது. மாலை 5.00 மணிக்கு பல்வேறு பூஜைகளும் இரவு 9.00 மணிக்கு தீப ஆராதனை உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்தது.கும்பாபிஷேக தினமான நேற்று காலை 8.00 மணிக்கு மங்கள இசையுடன், இரண்டாம் யாகசாலை பூஜைகளுக்குப் பின் கடம் புறப்பாடு துவங்கி விமானங்களில் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை