உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குறுங்காடு திட்டம் : கலெக்டர் துவக்கி வைப்பு

குறுங்காடு திட்டம் : கலெக்டர் துவக்கி வைப்பு

கடலுார் : கடலுார் பெரியார் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் குறுங்காடு அமைக்கும் திட்டத்தின் கீழ் 500 மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது.சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் கல்லுாரி வளாகங்களில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அதன்பேரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலுார், தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் குறுங்காடு திட்டத்தில், கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார்.கல்லுாரி வளாகத்தில் உள்ள 3 ஏக்கர் பரப்பில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் கொய்யா, மகோகனி, இலுப்பை, பலா, புன்னை, வேம்பு, புங்கன், நாவல் போன்ற 500 மரக்கன்றுகள் நடப்படுகிறது.குறுங்காடுகள் திட்டத்தில் நடப்படும் மரக்கன்றுகள் பாதுகாத்து வளர்க்க கல்லுாரி மாணவர்கள் நியமிக்கப்படுவார்கள். நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன், பேராசிரியர்கள் நிர்மல்குமார், ஆனந்தராஜ் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை