உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லட்சுமி சோரடியா பள்ளி அறிவியல் கண்காட்சி

லட்சுமி சோரடியா பள்ளி அறிவியல் கண்காட்சி

கடலுார் : கடலுார் லட்சுமி சோரடியா பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா அறிவியல் கண்காட்சியையும், பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி சோரடியா, ரோபாடிக் பிரிவையும் திறந்து வைத்தனர். ஆறாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. மாணவர்கள் தங்களின் படைப்புகள் குறித்து விளக்கி கூறினர்.ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா, ஒருங்கிணைப்பாளர் சித்ரா செய்திருந்தனர்.பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பதாகான், கணேசமூர்த்தி, தியாகு, ரோபாடிக் பிரிவு தலைவர் ஹத்தீஸ் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை