மேலும் செய்திகள்
மதுரையில் சுதந்திர தின விழா கோலாகலம்
16-Aug-2024
புவனகிரி: புவனகிரி தமிழ்ப்பேரவை சார்பில் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.புவனகிரி பாரதி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த இலக்கிய சந்திப்பு மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேரவை தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். துணை செயலர் கிருஷ்ணன் வரவேற்றார். தில்லை தமிழ்ச்சங்க துணைத் தலைவர் நடராஜன், காரைக்கால் மருத்துவக்கல்லுாரி பேராசிரியர் செல்வமுத்துக்குமரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சங்கத் தமிழ் உரையில் 'நீயே புறவின்' எனத்தொடங்கும் புறநானுாற்றுப்பாடல் குறித்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நெடுமாறன், 'நீங்காத செல்வம்' என்ற தலைப்பில் திருச்சி பேராசிரியர் ராதாகிருஷ்ணன்மாது பேசினார்.பேரவை பொருளாளர் ஜெகன் நன்றி கூறினர்.
16-Aug-2024