மேலும் செய்திகள்
மானியத்தில் வீரிய விதை மக்காச்சோளம் வினியோகம்
15-Aug-2024
சிறுபாக்கம் : மங்களூர் ஒன்றிய கிராம விவசாயிகள் மக்காச்சோளம் பயிரை சாகுபடி செய்யும் பணியை துவக்கியுள்ளனர்.மங்களூரில் ஒன்றியத்தில் 66 ஊராட்சிகளும், 30 துணை கிராமங்களும் உள்ளன. இப்பகுதி விவசாயிகள் ஆண்டுதோறும் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, வரகு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வது வழக்கம்.நடப்பாண்டில் மக்காச்சோளம் பயிரை 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்ய, வேளாண் துறை சார்பில் மானியத்தில் விதைகள், நுண்ணுாட்ட உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் பெய்த மழையை பயன்படுத்தி விளை நிலங்களில் விவசாயிகள் உழவு செய்து, விதைப்புக்கு காத்திருந்தனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கனமழை பெய்தது. இதனால், விளைநிலங்களில் ஏற்பட்ட ஈரப்பதத்தை பயன்படுத்தி, மக்காச்சோளம் விதைகளை விதைக்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
15-Aug-2024