உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருவந்திபுரம் அரசு பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு

திருவந்திபுரம் அரசு பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு

கடலுார் : கடலுார் வட்டார பொது சுகாதாரத்துறை சார்பில், திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மலேரியா எதிர்ப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.திருவந்திபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஆனந்த கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் தேன்மொழி முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இருதயராஜ் வரவேற்றார். மண்டல பூச்சியல் வல்லுநர் மீனா, மாவட்ட மலேரியா அலுவலர் பாலாஜி ஆகியோர் மலேரியா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் பரவும் முறை, தடுக்கும் முறை குறித்து விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மலேரியா எதிர்ப்பு உறுதிமொழி ஏற்று, விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது. இளநிலை பூச்சியல் வல்லுநர் மூர்த்தி, மாவட்ட நலக் கல்வி அலுவலர் சுந்தர்பாபு மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ