உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணாடம் அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

பெண்ணாடம் அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

பெண்ணாடம்: பெண்ணாடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்ததுகூட்டத்திற்கு, பள்ளி தலைமை ஆசிரியை சற்குணாம்பிகை தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். தமிழ் ஆசிரியர் மணிவண்ணன் வரவேற்றார். வட்டார வள மைய அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.புதிய மேலாண்மைக் குழு தலைவராக பாணுபிரியா, துணை தலைவராக ரமேஷ், உறுப்பினர்களாக ரமேஷ், அய்யப்பன், குருமூர்த்தி, வேல்முருகன், ஜோதிவேல், பொன்னழகன், இளையராஜா, சாபிரா பானு, பிருந்தாதேவி, ரூபசவுந்தரி, அலமேலு, உஷாராணி, வெற்றிக்கொடி, ஜெயந்தி, ரேகா, சொப்ணா, ரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.இதில், பள்ளியில் ஆசிரியர் - -மாணவர் உறவு, மாணவர்களின் இடைநிற்றலை தடுப்பது, கற்றல் திறன் மேம்பாடு பிரச்னைகளை கையாள்வது குறித்து பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி