கடலுார், : பண்ருட்டி அடுத்த தி.ராசாப்பாளையம் ரமேஷ்குமார்-மஞ்சுளா இல்ல திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது.பண்ருட்டி அடுத்த தி.ராசாப்பாளையம் ரமேஷ்குமார்-மஞ்சுளா தம்பதியரின் மகன் வழக்கறிஞர் பவித்ரராஜன் மற்றும் ஈரோடு மாவட்டம், தாண்டாம்பாளையம் சுப்பிரமணி-இளமதி தம்பதியர் மகள் வழக்கறிஞர் ஹரிணி ஸ்ரீ, திருமண நிச்சயதார்த்தம், ஈரோடு, ரத்னா ரெசிடென்சியில் நடந்தது. ஸ்ரீ கருப்பண்ணா குரூப்ஸ் பைனான்ஸ் ரகுபிரதீபன்-பிரீத்திகா மற்றும் உதவி பேராசிரியர் சக்திகணேஷ்-டாக்டர் பிந்துஓவியா வரவேற்றனர்.நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி., திருப்பூர் சிவசாமி, தொழிலதிபர் கார்மேகம், ஜெயப்பிரியா நிர்வாக இயக்குனர் ஜெய்சங்கர், தொழிலதிபர் நாகூர் கனி, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் சுபாஷ், பண்ருட்டி முன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம், ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க செயலாளர் சாம்பசிவம், ஈரோடு ஜனனி பாலு, உடுமலைப்பேட்டை தாமோதரன், இன்ஜினியர் மேகநாதன், ஊராட்சி தலைவர் ரஞ்சித்குமார், முகில், வி.என்.எஸ்., குரூப் அருண், காதர் உட்பட தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.