உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புவனகிரியில் மருத்துவ முகாம்

புவனகிரியில் மருத்துவ முகாம்

புவனகிரி: புவனகிரி வாசவி கிளப் மற்றும் நாமக்கல் அரவிந்த் மருத்துவமனை இணைந்து, மூட்டு தேய்மான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.புவனகிரி ஆரிய வைசிய பஜனை மடத்தில் நடந்த முகாமிற்கு வாசவி கிளப் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் ஜெய் அருண் வரவேற்றார். முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடசுப்ரமணியன், வாசவி கிளப் செயலாளர் முரளிதாஸ் முன்னிலை வகித்தனர். ஆரிய வைசிய சங்க தலைவர் சுந்தரேசன் முகாமை துவக்கி வைத்தார். நாமக்கல் அரவிந்த் மருத்துவமனை முடநீக்கியல் பிரிவு தலைமை மருத்துவர் மணி தலைமையிலான 15 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து, மருந்து மாத்திரைகள் வழங்கினர். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி 25 பேருக்கு ஊன்றுகோல், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. சங்க பி.ஆர்.ஓ., நாகராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி