உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வடக்குராஜன் வாய்க்காலை கடந்து செல்ல புதிய நடைபாலம்: கலெக்டர் தகவல்

வடக்குராஜன் வாய்க்காலை கடந்து செல்ல புதிய நடைபாலம்: கலெக்டர் தகவல்

கடலுார் : வீரசோழபுரம் கிராமத்தில் மயானத்திற்கு வடக்குராஜன் வாய்க்காலை கடந்து செல்ல 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய நடைபாலம் அமைக்கப்படும் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.காட்டுமன்னார்கோவில் அடுத்த வீரசோழபுரம் கிராமத்தில் மயானத்திற்கு வடக்கு ராஜன் வாய்க்காலை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த வாய்க்காலில் தற்போது நீர்வரத்து அதிகமாக உள்ளதால் இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்ய வாய்க்காலை கடந்து செல்வதில் சிரமம் உள்ளதாக புகார் எழுந்தது. வீரசோழபுரம் கிராமத்தில் வடக்கு ராஜன் வாய்க்கால் கரையோரத்தில் இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்யும் வழக்கம் உள்ளது. இதற்காக கடந்த 2023--2024 நிதியாண்டில் 13 லட்சம் மதிப்பில் நடைப்பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தற்போது மற்ற பகுதி மக்கள் சுமார் 500 மீ தொலைவில் உள்ளவர்களின் பயன்பாட்டிற்காக 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதலாக புதிய நடைபாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.வடக்கு ராஜன் வாய்க்காலில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் மயானத்திற்கு செல்ல ஏதுவாக தற்காலிகமாக பாலம் உடனடியாக அமைக்கப்பட உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை