உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., அதிகாரிகள் சிறைபிடிப்பு

என்.எல்.சி., அதிகாரிகள் சிறைபிடிப்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், கோபாலபுரம், மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை என்.எல்.சி., நிர்வாகம் நிலம் கையகப்படுத்தி உள்ளது. இந்த நிலங்களுக்கு சமமான இழப்பீடு, நிரந்தர வேலை வழங்க வேண்டி நில உரிமையாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், என்.எல்.சி., நிர்வாகம் கையகப்படுத்திய நிலங்களில் கம்பி வேலி அமைக்க நேற்று முயன்றனர்.இதையறிந்த கிராம மக்கள் விருத்தாசலம் அடுத்த சிறுவரப்பூர் கிராமத்தில், என்.எல்.சி., அதிகாரிகளை சிறை பிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கம்மாபுரம் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர்.அதனையேற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டதை தொடர்ந்து, என்.எல்.சி., அதிகாரிகள் கம்பி வேலி அமைக்கும் பணியை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி