உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயிலில் அடிபட்டு முதியவர்  பலி

ரயிலில் அடிபட்டு முதியவர்  பலி

சிதம்பரம்: சிதம்பரத்தில்,தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்தார்.சிதம்பரம்- கிள்ளை ரயில் நிலையத்திற்குஇடையே, நேற்று காலை 70 வயதுடைய முதியவர் தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது, திருவாரூரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற பாசஞ்சர் ரயில் அவர் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி முதியவர் இறந்தார்.தகவலறிந்த சிதம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, உயிரிழந்த முதியவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை