உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓம்சக்தி பெட்ரோலிய நிறுவன உரிமையாளர் இல்ல திருமண விழா

ஓம்சக்தி பெட்ரோலிய நிறுவன உரிமையாளர் இல்ல திருமண விழா

மந்தாரக்குப்பம்; கடலுாரில் ஓம்சக்தி பெட்ரோலிய நிறுவனங்களின் இல்ல திருமண விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். கடலுார் ஓம்சக்தி பெட்ரோலிய நிறுவனங்கள் உரிமையாளர் கோவிந்தராஜூலு நாயுடு-ராஜலட்சுமி தம்பதியர் மகன் பரணிமுத்தையாக்கும், அரியலுார் உடையார்பாளையம் ராமலிங்கம் நாயுடு-ஜெயந்தி தம்பதியரின் மகள் மகாலட்சுமிக்கும் திருமண விழா கடலுார் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. த.மா.கா., மாவட்ட தலைவர் ராமலிங்கம் நாயுடு-விஜயலட்சுமி தம்பதியர் அனைவரையும் வரவேற்றனர். விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத், காங்., நிர்வாகிகள் வெங்கடேசன், நெடுஞ்செழியன், ஞானசந்திரன், ரகுபதி. தே.மு.தி.க.,மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராமலிங்கம், ஓம்சக்தி பெட்ரோல் நிறுவனங்களின் மேலாளர்கள், ஊழியர்கள், டாக்டர்கள், தொழிலதிபர்கள், ஆடிட்டர்கள், முக்கிய பிரமுகர்கள், நண்பர்கள், வியாபாரிகள், வர்த்தகர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். திருமண விழாவிற்கு வந்தவர்களுக்கு மணமக்களின் பெற்றோர்கள் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி