உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம்... மாவட்டத்தில் பணிகள் துவங்குவதில் தாமதம்

தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம்... மாவட்டத்தில் பணிகள் துவங்குவதில் தாமதம்

கடலுார்: தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் திட்டத்தின் கீழ், கடலுார் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட மினி ஸ்டேடியம் கட்டுமானப்பணிகள் துவங்குவதில் தாமதம் நிலவுகிறது.தமிழகத்திலுள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி அறிவித்தார். முதற்கட்டமாக முதல்வர் ஸ்டாலினின் கொளத்துார் தொகுதி, துணை முதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் தொகுதி உள்ளிட்ட 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணி துவங்கியது. இரண்டாம் கட்டமாக, கடலுார் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி உட்பட 22 தொகுதிகளில் தலா 3கோடி ரூபாய் வீதம் 66கோடி ரூபாய் மதிப்பில் மினிஸ்டேடியம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட 10 தொகுதிகளில் மினிஸ்டேடியங்களை துணை முதல்வர் உதயநிதி நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.ஆனால், இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி தொகுதி வழுதலம்பட்டு ஊராட்சி, பண்ருட்டி தொகுதி காடாம்புலியூர் ஊராட்சியில் ஸ்டேடியம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டதோடு சரி. பணிகள் துவங்கப்படவில்லை.இதுகுறித்து அப்பகுதி இஞைளர்கள் கூறுகையில், மினி ஸ்டேடியம் அமைக்க, கரடுமுரடாக உள்ள இடத்தை காண்பித்தால் அதை சீரமைக்க தங்களிடம் நிதியில்லை எனக்கூறி, ஒப்பந்ததாரர்கள் தட்டி கழிக்கின்றனர். எனவே, தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை சீரமைக்க எம்.எல்.ஏ., நிதியிலிருந்து ஒதுக்கி சீரமைத்தால் பணிகள் விரைவில் துவங்கும் என தெரிவித்தனர். இடத்தை சீரமைத்து பணிகளை விரைவில் துவங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை