உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நகராட்சிப் பள்ளியில் கணினி அறை திறப்பு

நகராட்சிப் பள்ளியில் கணினி அறை திறப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில், 30 கணினிகளுடன் புதிய அறை திறப்பு விழா நடந்தது.விருத்தாசலம் தென்கோட்டைவீதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில், மாணவர்கள் நலன் கருதி தன்னார்வலர்கள் நிதியுதவியுடன் தமிழக அரசால் 30 கம்ப்யூட்டர்களுடன் கூடிய கணினி அறை அமைக்கப்பட்டது. கல்வி வளர்ச்சி நாள் மற்றும் காமராஜர் பிறந்த நாளையொட்டி நேற்று திறப்பு விழா நடந்தது.தலைமை ஆசிரியர் கமலாதேவி வரவேற்றார். ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த் குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர் வரதராஜபெருமாள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் காயத்ரி, ஆசிரியர்கள் வள்ளி, சாந்தி, வரதராஜன், சுமதி உட்பட மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் பலர் உடனிருந்தனர். 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று முதல் கணினி பயிற்சி துவங்கப்பட்டது.சென்னை அல்டியூஸ் அறக்கட்டளை, விருத்தாசலம் ஜெயின் ஜூவல்லரி, பள்ளி முன்னாள் மாணவர்கள், வாசவி கிளப், ஜே.சி.ஐ., மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் நன்கொடை மூலம் கம்ப்யூட்டர்கள் பெறப்பட்டு, தமிழகத்திலேயே முதல் முறையாக நடுநிலைப் பள்ளியில் 30 கணினிகளுடன் அறை துவங்கியுள்ளது என தலைமை ஆசிரியர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ