உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஏற்றுமதி மேம்பாட்டு மையம் திறப்பு

ஏற்றுமதி மேம்பாட்டு மையம் திறப்பு

கடலுார், : ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் புதுச்சேரி கிளை திறப்பு விழா நடந்தது.புதுச்சேரியில் நடந்த விழாவில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, புதிய கிளையை துவக்கி வைத்தார். பின், ஏற்றுமதி பொருள் சார்ந்த பயிற்சி பட்டறையை துவக்கி வைத்தார். மதுரை ஏற்றுமதி மேம்பாட்டு மையத் தலைவர் திருப்பதி ராஜன், துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.ஏற்றுமதி மேம்பாட்டு மைய புதுச்சேரி தலைவராக பவானி மசாலா நிர்வாக இயக்குனர் ஜெயசங்கர், துணைத் தலைவராக திருப்பதி ராகவன், செயலாளராக கார்த்தீசன், பொருளாளராக பொய்யாமொழி பதவியேற்றனர். சிறப்பு விருந்தினராக மேனாடெக் நிறுவன சேர்மன் மன்னநாதன் பங்கேற்றார். புதுச்சேரி இளம் தொழில் முனைவோர் மையத் தலைவர் சிவா, புதுச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்றுமதி பொருட்கள் குறித்து பேசினார்.விழாவை உறுப்பினர் ேஹமலதா ைஹடெக் நிர்வாக இயக்குனர் செந்தில்பாரதி தொகுத்து வழங்கினார். மீனா பைபர்ஸ் சுந்தரேசன், கேசினோ பேக்கரி சேகர், ஜெயம் பாத்திர மாளிகை சிவராம வீரப்பன், பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்க தலைவர் அருள்செல்வம், கே.வி.எஸ்.கேட்டரிங் சிவக்குமார், உறுப்பினர் வேங்கடபதி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை