உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணாடம் கோவிலில் தீ வைக்கப்பட்ட உண்டியல் திறப்பு

பெண்ணாடம் கோவிலில் தீ வைக்கப்பட்ட உண்டியல் திறப்பு

பெண்ணாடம்:பெண்ணாடத்தில் மாணவர்களால் தீ வைக்கப்பட்ட உண்டியலில் 700 ரூபாய் மட்டுமே சேதமாகி இருந்தது.கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் பழமை வாய்ந்த அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. தற்போது, கோவில் கும்பாபிேஷகம் நடத்த திருப்பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை அம்மன் சன்னதி முன் இருந்த 2 உண்டியலில் புகை மூட்டம் வருவதைக்கண்டு பக்தர்கள் கூச்சலிட்டனர். கோவில் செயல் அலுவலர் மகாதேவி மற்றும் ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.போலீசார் கோவில் அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை ஆய்வு செய்தனர். அதில், தரிசனம் செய்ய வந்த மாணவர்கள் சிலர், சில்வர் உண்டியல், இரும்பு பெட்டி போன்ற உண்டியல் அருகே சென்று பேப்பரில் தீயை கொளுத்தி உண்டியலுக்குள் போட்டு விட்டு, அங்கேயே கும்மாளம் போட்டு மகிழ்ந்தது தெரிந்தது.இதுகுறித்து, கடலுார் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, திட்டக்குடி சரக ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, கோவில் செயல் அலுவலர் மகாதேவி முன்னிலையில் உண்டியல் பிரிக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.அதில், 48,435 ரூபாய் மற்றும் தீயில் கருகிய நிலையில் 700 ரூபாய் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ