உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல் விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி

நெல் விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி

விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கினார். இணை பேராசிரியர் (பூச்சியியல்) ரவிச்சந்திரன், தொழில்நுட்ப வல்லுனர் காயத்ரி ஆகியோர் பயிற்சி அளித்தனர். அதில், வேளாண் அறிவியல் நிலையத்தின் குறிக்கோள், அதிக மகசூல் தரும் உயர்ந்த ரகங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.மேலும், பூச்சி நோய் தாக்குதல், அதன் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பராமரிப்பு, பூச்சி நோய் மேலாண்மை குறித்து செயல்விளக்கப் பயிற்சி தரப்பட்டது. மண்ணின் முக்கியத்துவம், வேளாண் பல்கலைக் கழக இணையதள சேவைகள், அதன் செயலாக்கம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ