உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பத்திரக்கோட்டை - குமளங்குளம் இடையே இணைப்பு சாலை: சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆய்வு

பத்திரக்கோட்டை - குமளங்குளம் இடையே இணைப்பு சாலை: சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆய்வு

நடுவீரப்பட்டு : பத்திரக்கோட்டையில் நடக்கும் சாலை பணியினை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.நெய்வேலி தொகுதியில், பத்திரக்கோட்டை - குமளங் குளம் வரை இணைப்பு சாலை இல்லாததால் பத்திரக்கோட்டையை சேர்ந்தவர்கள் நடுவீரப்பட்டு வழியாக சுற்றி, கடலுார் சென்று வருகின்றனர். இரண்டு கிராமங்களையும் இணைக்க சாலை இல்லாததால் பத்திரக்கோட்டையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வேளாண் பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது.இதனால் பத்திரக்கோட்டையில் இருந்து குமளங்குளம் செல்ல இணைப்பு சாலை வசதி செய்து தர வேண்டுமென கிராம மக்கள் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் முதல்வர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 66 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி துவங்கியது. இப்பணிகளை சபாராஜேந்திரன் எம்.எல்.ஏ., பார்வையிட்டார்.மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், ஊராட்சி செயலாளர் நடராஜன், முன்னாள் கவுன்சிலர் தெய்வமூர்த்தி, த.வா.க., மாவட்ட பொருளாளர் முருகவேல், பத்திரக்கோட்டை கண்ணுசாமி, மணிவாசகம், சுரேஷ் உட்பட பலர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை