பெட்டிஷன் மேளா
கடலுார்: கடலுார் மாவட்டம் போலீஸ் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன் மேளா நடந்தது. இதில், எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கி பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக நேரடியாக விசாரணை மேற்கொண்டார். புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். கூடுதல் எஸ்.பி., கோடீஸ்வரன், ரகுபதி, டி.எஸ்.பி., மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.