உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருப்பாதிரிப்புலியூர் பெண்கள் பள்ளியில் தினமலர்-பட்டம் இதழ் வழங்கல்

திருப்பாதிரிப்புலியூர் பெண்கள் பள்ளியில் தினமலர்-பட்டம் இதழ் வழங்கல்

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள்,நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ளதொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்குஎளிதில் புரியும் வகையில் 'தினமலர்-பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரைவெளியிடப்பட்டு வருகிறது. கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆப் கடலுார் சங்கமம் சார்பில் மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டல துணை ஆளுநர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தாசில்தார் பலராமன் மாணவியருக்கு பட்டம் இதழ் வழங்கினார்.தலைமை ஆசிரியை இந்திரா, சங்க தலைவர் நாராயணசாமி, செயலாளர் கார்த்தீசன், பொருளாளர் ஞானசேகரன், உறுப்பினர்கள் சந்தியா என்டர்பிரைசஸ் முருகன், சன் பிரைட் பிரகாஷ், வி.ஏ.ஓ., உசைன்,உமா சுதன்,ஜெயபிரகாஷ்,செல்வராஜ்,இளங்கோவன், சகாயராஜன், ரவிச்சந்திரன், கார்த்திக், சூரியமூர்த்தி,பாலா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை