| ADDED : ஜூன் 14, 2024 06:37 AM
கடலுார்: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் தங்கத்தம்பி தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் திருசங்கு, முருகதாஸ் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் கிறிஸ்டோபர், மாவட்ட செயலாளர் சாந்தகுமார், துணை செயலாளர்கள் வெங்கடாசலம், நாராயணமூர்த்தி, அனார்கலி கண்டன உரையாற்றினர். அனைத்து குடியிருப்போர் நலச்சங்க சிறப்புத் தலைவர் மருதவாணன், வைத்திலிங்கம், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், கண்ணன் வாழ்த்திப் பேசினர். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் தாமாகவே வருமானவரி பிடித்தம் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.மைதிலி நன்றி கூறினார்.