முதல்வர் கோப்பை போட்டி: கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு
கடலுார்,: முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கல்லுாரி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினர்.கடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 10ம் தேதி துவங்கியது. இப்போட்டியில், பங்கேற்க 12 ஆயிரத்து 537 பள்ளி மாணவ, மாணவியர், கல்லுாரி மாணவ, மாணவியர் 6033 பேர், மாற்றுத்திறனாளிகள் 788 பேர், அரசுத்துறைகளில் பணியாற்றுவோர் 722 பேர், பொதுப் பிரிவினர் 2002 பேர் என மொத்தம் 22 ஆயிரத்து 82 பேர் பதிவு செய்துள்ளனர்.இதில் நேற்று கல்லுாரி மாணவ, மாணவியர்களுக்கான போட்டி துவங்கியது. மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் குமார் தலைமை தாங்கினார். எஸ்.பி., ராஜாராம் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார். தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, மட்டைப்பந்து, கால்பந்து, கபடி, மேசைப்பந்து, வாலிபால், கைப்பந்து, கேரம், செஸ், சிலம்பம் மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடந்தது. இப்போட்டிகளில் கலந்துகொள்ள பதிவு செய்த 6033 மாணவ,மாணவியர் கலந்து கொண்டு விளையாடினர்.