உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம்

ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்; விருத்தாசலம் ரயில் நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ரயில்வே தனியார் மயமாவதை நிறுத்த வேண்டும். ஆட்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பயோமெட்ரிக் என்ற பெயரால் தொழிலாளர்களை துன்புறுத்தக் கூடாது, அனைத்து வகை பணியாளர்களுக்கும் 8 மணி நேர வேலையைஉறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடந்தது.கிளை தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் கணேஷ்குமார் உட்பட தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர். அதில், மத்திய அரசையும், ரயில்வே நிர்வாகத்தையும் கண்டித்து கோஷமிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி