உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதியவர் சடலத்துடன் போராட்டம் விருத்தாசலம் அருகே பரபரப்பு

முதியவர் சடலத்துடன் போராட்டம் விருத்தாசலம் அருகே பரபரப்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே இறந்தவரின் சடலத்தை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி ஜெ.ஜெ., நகரில் வசிக்கும், அருந்ததியர் இன குடும்பத்தில் எவரேனும் இறந்தால், வௌ்ளாற்றங்கரையில் அடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சின்னதுரை என்பவர் நேற்று விபத்தில் இறந்தார். அவரது உடலை அப்பகுதியில் உள்ள மயானத்தில் தான் அடக்கம் செய்ய வி.சி.க., மண்டல செயலாளர் ராஜ்குமார் தலைமையில் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.அப்போது, சுடுகாட்டிற்கு செல்லும் பாதை எங்கள் பட்டாவில் உள்ளதால் வழி விட மாட்டோர். எங்களிடம் கோர்ட் உத்தரவு உள்ளது. வழக்கமாக அடக்கம் செய்யும் வெள்ளாற்றங்கரையில், அடக்கம் செய்யுமாறு இடத்தின் உரிமையாளர்கள் கூறினர்.சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ், வழக்கம் போல் வெள்ளாற்றங்கரையி்ல அடக்கம் செய்யுமாறு கூறினார். அதற்கு எதிரப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், சின்னதுரை உடலை சாலையில் வைத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் தாசில்தார் உதயகுமார், இப்பிரச்னை தொடர்பாக நாளை (இன்று) 11ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியதை ஏற்று, சின்னதுரை உடலை வெள்ளாற்றங்கரையில் அடக்கம் செய்துவிட்டு சென்றனர்.இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ