உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நகர தி.மு.க., சார்பில் உதவிகள் வழங்கல் 

நகர தி.மு.க., சார்பில் உதவிகள் வழங்கல் 

பண்ருட்டி : பண்ருட்டி நகர தி.மு.க., சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் தினவிழா முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட அவைத் தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தொகுதி மேற்பார்வையாளர் புஷ்பராஜ், நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் ஆகியோர் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.இதில் மாவட்ட துணைச் செயலாளர்கள் தணிகை செல்வம், ஆனந்தி சரவணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் மணிவண்ணன், நகர அவைத் தலைவர் ராஜா, நகர பொருளாளர் ராமலிங்கம், நகர துணை செயலாளர் கவுரி அன்பழகன், நகர துணை செயலாளர் சீனிவாசன், கவுன்சிலர் சண்முகவள்ளி, இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத், துணை அமைப்பாளர் ராஜா, தொழில் நுட்ப அணி அமைப்பாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ