உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் மீது கார் மோதல் புதுச்சேரி முதியவர் பலி

பைக் மீது கார் மோதல் புதுச்சேரி முதியவர் பலி

சிதம்பரம் : சிதம்பரம் அருகே பைக் மீது கார் மோதியதில், புதுச்சேரி முதியவர் இறந்தார்.புதுச்சேரி கதிர்காமம், நேரு நகரை சேர்ந்தவர் முருகன்,62; சிதம்பரத்தில் தங்கி, ஸ்வீட் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் முருகன் தனது பைக்கில், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தார்.வக்காரமாரி அருகே சென்றபோது, எதிரே வந்த கார், முருகன் மீது மோதியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.விபத்து குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை