கடலுாரில் 15ம் தேதி ராதா திருக்கல்யாணம்
கடலுார்: கடலுார் ஸ்ரீ சங்கர பக்த ஜன சபா சார்பில் 67வது கிருஷ்ணர், ராதா திருக்கல்யாண உற்சவம் வரும் 15ம் தேதி நடக்கிறது.விழாவையொட்டி, வரும் 14ம் தேதி காலை 7:00 மணிக்கு பாதுகா அபிேஷகம், 8:30 மணிக்கு தோடய மங்களம் குருகீர்த்தனை, மாலை 4:00 மணி முதல் அஷ்டபதி, தரங்கம், பஞ்சபதி, இரவு 7:30 மணி முதல் 11:00 மணி வரை தியான பூஜை, திவ்யணாமம், டோலோத்ஸசவம் நடக்கிறது.15ம் தேதி காலை 9:00 மணி முதல் 1:00 வரை ஸ்ரீ ராதா திருக்கல்யாண உற்சவம், ஆஞ்சநேய உற்சவம் நடக்கிறது. நாகூர் ஸ்ரீ அரவிந்த் ஸ்ரீகாந்த் பாகவதர் மற்றும் குழுவினர், உள்ளூர், வெளியூர் பாகவதர்களின் நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை சங்கர பக்த ஜன சபா தலைவர் திருமலை மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.