மேலும் செய்திகள்
பொன்னேரி ரயில்வே சுரங்கப்பாதையில் நெரிசல்
05-Aug-2024
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் சுல்தான்பேட்டை ரயில்வே சுரங்கப்பாதை வழியாக வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என, விஷ்ணுபிரசாத் எம்.பி., உறுதி அளித்தார்.விழுப்புரம்- மயிலாடுதுறை ரயில்வே பாதை அகல பாதையாக மாற்றப்பட்டது. அப்போது நெல்லிக்குப்பம் சுல்தான்பேட்டை அருகே இருந்த ரயில்வே கேட் அகற்றப்பட்டு அங்கு சுரங்கபாதை அமைத்தனர். சுரங்கபாதையில் படிக்கட்டுகள் அமைத்தனர். இந்த பாதையை கடந்து சுல்தான்பேட்டை, அவுலியா நகர், ஷர்பியா நகர் பகுதிகளில் வசிக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்த வேண்டும். ஆனால் வாகனங்கள் செல்ல முடியாமல் படிக்கட்டுகள் அமைத்ததால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.சுரங்கபாதையை வாகனங்கள் செல்லும்படி மாற்றி தர வேண்டுமென காங்., நகர செயலாளர் பாரூக், தி.மு.க.கவுன்சிலர் ஷப்னாபேகம் ஆகியோர், விஷ்ணுபிரசாத் எம்.பி., யிடம் மனு அளித்தனர்.அதையடுத்து சுல்தான்பேட்டை ரயில்வே சுரங்கபாதையை விஷ்ணுபிரசாத் எம்.பி., நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மூன்று மாதத்தில் வாகனங்கள் செல்லும் படி மாற்றி தருவதாக உறுதியளித்தார். காங்., மாவட்ட தலைவர் திலகர், நகர தலைவர் ரவிக்குமார் உடனிருந்தனர்.
05-Aug-2024