மேலும் செய்திகள்
பஸ் வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்
03-Mar-2025
திட்டக்குடி : திட்டக்குடியில் இருந்து ஆவினங்குடி வழியாக நெய்வாசலுக்கு அரசு டவுன் பஸ் இயக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திட்டக்குடி அடுத்த நெய்வாசல் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததால், மக்கள் 4 கிலோ மீட்டர் துாரமுள்ள ஆவினங்குடி பஸ் நிறுத்தம் அல்லது 6 கிலோ மீட்டர் துாரமுள்ள கொடிகளம் பஸ் நிறுத்ததிற்கு நடந்து வந்து பஸ் ஏற வேண்டியுள்ளது. பஸ் வசதிக்கோரி கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.எனவே, திட்டக்குடியில் இருந்து ஆவினங்குடி வழியாக நெய்வாசலுக்கு அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
03-Mar-2025