மேலும் செய்திகள்
விபத்துக்கு வித்திடும் ஒருவழிப்பாதை பயணம்
29-Jun-2026
புதுச்சத்திரம்: சிலம்பிமங்களம்–சாமியார்பேட்டை நான்கு வழி சாலை சந்திப்பில், பேரிகார்டு அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம்–நாகை தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு, கடந்த ஆண்டு ஏப்ரலில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது இந்நிலையில் புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்களம் –சாமியார்பேட்டை, நான்கு வழிச்சாலையில் பேரிகார்டுகள் இல்லை. இதனால் சைக்கிள், பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் சாலையின் குறுக்கே கடக்கும்போது, எதிரில் வரும் வாகனங்கள் வேகமாக வந்து மோதி அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, சிலம்பிமங்களம் நான்கு வழிச்சாலையில் பேரிகார்டு அமைக்க, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
29-Jun-2026