உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலை பணி கிடப்பில்

சாலை பணி கிடப்பில்

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கீழ்புளியங்குடி அருகே ஸ்ரீவக்காரமாரி பொதுமக்களின் சுடுகாடு, வயல் வெளிக்கு செல்லும் சாலை உள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புதிதாக தார்சாலை அமைக்கும் பணி துவங்கியது.ஆமை வேகத்தில் நடந்த சாலைப்பணியில் தற்போது கருங்கல் ஜல்லி கள் கொட்டி முழுவதும் பெயர்ந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு சறுக்கி விழுந்து காயம் ஏற்படுகிறது.இந்த சாலை வழியாக இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டிற்கு எடுத்து செல்லும்போது, கால்களில் ஜல்லிகள் குத்துவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்க அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை