உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

காட்டுமன்னார்கோவில்: பொதுதேர்வில் சாதனை படைத்த குமராட்சி அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வர்த்தக சங்கம் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.குமராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு குமராட்சி வர்த்தக சங்கம் சார்பில் கல்வி ஊக்த்தொகை வழங்கப்பட்டது.தலைமை ஆசிரியர் திருமுருகன் தலைமை தாங்கினார். குமராட்சி வர்த்தக சங்கத் தலைவர் தமிழ்வாணன், பள்ளியில் சாதனை படைத்த பிளஸ் 2 மாணவிகள் கவிப்பிரியா, சந்தியா, கனிமொழி மற்றும் பத்தாம் வகுப்பு மாணவிகள் அபிதா, கனிமொழி, சந்தோஷினி, நர்மதா, ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.வர்த்தக சங்க செயலாளர் மணிவண்ணன் , ஒருங்கிணைப்பாளர் அப்துல் பாசித், துரைசிங்கம், பார்த்தசாரதி, பாலமுருகன், மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர். சுப்ரமணியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ