உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் தேர்வு

பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் தேர்வு

திட்டக்குடி, : திட்டக்குடி அடுத்த ஈ.கீரனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் ராஜா தலைமை தாங்கினார். தி.இளமங்கலம் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் சுப்ரமணியன், தேர்தல் பார்வையாளராக பங்கேற்று தேர்தலை நடத்தினார்.பள்ளி மேலாண்மை குழு தலைவராக ஷோபா, துணைத் தலைவராக கலைச்செல்வி, ஆசிரியர் உறுப்பினராக முதுகலை ஆசிரியர் தீபா தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளியின் வளர்ச்சிக்கு முழுமையாக பாடுபடுவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை