உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செல்வமுத்துகுமாரசாமிக்கு 13ம் தேதி மண்டகப்படி

செல்வமுத்துகுமாரசாமிக்கு 13ம் தேதி மண்டகப்படி

புவனகிரி : குறிஞ்சிப்பாடி அடுத்த சிங்கபுரி, செல்வமுத்துக்குமாரசாமிக்கு வரும் 13ம் தேதி மண்டகப்படி நடக்கிறது.அதனையொட்டி, நாளை (12ம் தேதி) மாலை 6:00 மணிக்கு சிவகாமி அம்மன் சமேத நடராஜமூர்த்திக்கு மகா அபிஷேகமும், நள்ளிரவு 2:00 மணிக்கு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.தொடர்ந்து 13ம் தேதி காலை 8:00 மணிக்கு சி.புதுப்பேட்டை கடற்கரையில் மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10:00 மணிக்கு பரங்கிப்பேட்டையில் மண்டகப்படியும், மாலையில் புவனகிரிக்கு எழுந்தருள் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின், புவனகிரி எல்லையில் வரவேற்பும், மாலை 4:00 மணிக்கு புவனகிரி மண்டகப்படி நிகழ்ச்சியை புவனகிரி செங்குந்தர் மரபினர் நடத்துகின்றனர். ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை