கல்லுாரி பஸ்சில் பாம்பு வடலுாரில் பரபரப்பு
கடலுார் : கல்லுாரி பஸ்சில் புகுந்த பாம்பை, ஒரு மணி நேர போராட்டத்திற்குப்பின் தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.குறிஞ்சிப்பாடி தனியார் கல்லுாரி மாணவிகள், நேற்று வடலுார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கல்லுாரி பஸ்சில் சென்றனர். நிகழ்ச்சி முடிந்து மீண்டும் கல்லுாரிக்கு திரும்புவதற்காக மாலை 3:30மணியளவில் மாணவிகள் பஸ்சில் ஏறினர். அப்போது பஸ்சிற்குள் நல்லப்பாம்பு ஒன்று இருந்ததை பார்த்து மாணவிகள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் உத்திராபதி தலைமையில் விரைந்து வந்து பஸ்சில் பதுங்கியிருந்த நல்லப்பாம்பை, ஒரு மணி நேர போராட்டத்திற்குப்பின் பிடித்து, காப்புக்காட்டில் விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.