சிதம்பரம் பல்கலையில் விளையாட்டு போட்டி
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக, தாவரவியல் துறையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. துறைத் தலைவர் தமிழினியன் தலைமை தாங்கி போட்டியை துவக்கி வைத்தார். பேராசிரியர்கள் குமாரசாமி, வெங்கடேசன் ஒருங்கிணைந்து போட்டிகளை நடத்தினர். மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் சந்தோஷ், தீப்ஷிகா, வெங்கடேசன் உடன் இருந்தனர். போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, துறைத்தலைவர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.