பக்தர்கள் பைகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி
கடலுார்: வேளாங்கண்ணி தேர்த்திருவிழா நடைபெற உள்ளதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சாரை சாரையாக வேளாங்கண்ணிக்கு பாதையாத்திரையாக செல்கின்றனர். இவர்கள் இரவு நேரங்களிலும் நடைபயணம் மேற்கொள்வதால் பாதுகாப்பு கருதி அவர்கள் எடுத்து செல்லும் பைகளில் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டுமாறு எஸ்.பி., ராஜாராம் அறிவுறுத்தினார்.அதன்பேரில் கடலுார் டவுன் டி.எஸ்.பி., பிரபு தலைமையில், பக்தர்களின் பாதுகாப்பு கருதி அவர்களது பைகளில் போலீசார் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டினர்.