உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருடப்பட்ட பைக் எரிப்பு; நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு

திருடப்பட்ட பைக் எரிப்பு; நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பத்தில் திருடி சென்ற பைக்கை திருடர்களே தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி செல்லமுத்து. அதே பகுதி பாபா நகரை சேர்ந்தவர் திருமலை. நேற்று முன்தினம் இரவு, இருவரது பைக்குகளும் காணாமல் போனது. இந்நிலையில், வீட்டு அருகே காளிக்கோவில் பின்புறம் செல்லமுத்துவின் பைக் தீவைத்து எரிக்கப்பட்டு கிடந்தது. திருமலை பைக் காணவில்லை. செல்லமுத்துவின் பைக் ஸ்டார்ட் செய்ய முடியாத நிலையில் அதனை, திருடர்கள் தீ வைத்து எரித்திருக்கலாம் என, தெரிகிறது.இதுகுறித்து செல்லமுத்து மற்றும் திருமலை இருவரும் கொடுத்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன திருமலையின் பைக்கை தேடி வருகின்றனர். மேலும், பைக்கை தீவைத்து எரிக்கப்பட்டது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை