உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்டத்தில் திடீர் மழை

மாவட்டத்தில் திடீர் மழை

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அதிக பனிப்பொழிவும், பகலில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக, கடலுார் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் திடீர் மழை பெய்தது. கடலுார், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பொழிவு காணப்பட்டது. பரங்கிப்பேட்டை, கலெக்டர் அலுவலகம் பகுதியில் தலா 17.3 மி.மீ., கடலுார் 16.4 மி.மீ., காட்டுமன்னார்கோவில் 3 மி.மீ பதிவாகியது. மழையால் வெப்பம் தனிந்து குளிர் காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி