உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க ஆலை பகுதி தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரவிச்சந்திரன், மாநில தலைவர் வேல்மாறன், சங்க செயலாளர் வரதன், உதவி தலைவர்கள் டாடா, மகாலிங்கம் முன்னிலை வகித்தனர். பரமசிவம் வரவேற்றார்.இதில், கரும்பு டன்னுக்கு 5,500 ரூபாய் அறிவிக்க வேண்டும். கரும்பு பாக்கி உள்ள விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பெற்றுத்தர வேண்டும். கரும்பில் நோய் தாக்குதல், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் போது விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க ஆலை நிர்வாகம் காப்பீடு செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சங்க பொருளாளர் கொளஞ்சி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ