உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

கடலுார்: கடலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக ராஜேஷ் பாபு பொறுப்பேற்றுக்கொண்டார். கடலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பதவியில் இருந்த சிவக்குமார் குற்றவியல் அலுவலக மேலாளராக கலெக்டர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக பேரிடர் மேலாண்மை தாசில்தாராக பதவி வகித்து வந்த ராஜேஷ்பாபு, கடலுார் தாசில்தாராக மாற்றப்பட்டார். நேற்று காலை அவர் தாலுகா அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !