மேலும் செய்திகள்
போதை தலைமை ஆசிரியர் சி.இ.ஓ.,வுக்கு தலைவலி
28-Aug-2024
கடலுார் : கடலுார், மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப்மேல்நிலைப் பள்ளி மற்றும் பாலர் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது.மாநகராட்சி கமிஷனர் அனு தலைமை தாங்கி, ஆசிரியர்களுக்கும், போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும் பரிசு வழங்கினார். பின், 'வாழ்வில் வெற்றி பெற பயிற்சியும், விடா முயற்சியும் தேவை. ஆசிரியர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்' என்றார். பள்ளி முதல்வர் நசியான் கிரகோரி முன்னிலை வகித்தார். நர்சரி பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயபாலன், மாநகர கவுன்சிலர் அருள்பாபு வாழ்த்தி பேசினர்.உதவித் தலைமை ஆசிரியர்கள் சார்லி பெலிக்ஸ், வில்லியம்ஸ், ஆரோக்கியசாமி, ஆசிரியர் அந்தோணிராஜ் கருத்துரையாற்றினர்.நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுரேஷ் ராஜன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
28-Aug-2024