உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றுவதில் நெடுஞ்சாலை துறையினர் மெத்தனம்

ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றுவதில் நெடுஞ்சாலை துறையினர் மெத்தனம்

நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டும் அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வருகின்றனர். கடலுார் மாவட்டத்தில், விருத்தாசலம், சிதம்பரம், புவனகிரி, வடலுார், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக இடங்கள் கையகப்படுத்தப்பட்டது. பின் இந்த இடங்களில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்டு கடந்த 2018-19 ஆண்டு அளவீடு செய்து அத்துக்கல் நட்டனர்.இதற்கு பின் பல்வேறு நபர்கள் நெடுஞ்சாலை துறைக்கு சொந்த மான இடத்தில் ஆக்கிரமித்து வீடு, கடைகளை கட்டிக்கொண்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைதுறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை ஐக்கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.விசாரணையில் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐக்கோர்ட் உத்தரவிட்டது.இருந்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்ததால் ஐக்கோர்ட் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி 6 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என சென்னை ஐக்கோர் உத்தரவிட்டது.இதன் பேரில் நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடங்களிலும், வீடுகள், கடைகள், வணிக வளாகங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் ஒட்டினர். அதனை தொடர்ந்து ஒலி பெருக்கி கொண்டு ஆக்கிரமிப்புகளை 7 நாட்களில் தாங்களாகவே அகற்றி கொள்ள வேண்டும் என அறிவிப்பு செய்தனர்.இருந்து இது குறித்து தொடர் நடவடிக்கை எடுக்காமல் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மெத்தனமாக இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை