உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலம் கோவிலில் திருவிளக்கு பூஜை

விருத்தாசலம் கோவிலில் திருவிளக்கு பூஜை

விருத்தாசலம் : விருத்தாசலம் செங்கழனி மாரியம்மன் கோவிலில், நடந்த திருவிளக்கு பூஜையில், ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.விருத்தாசலம் பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவில், 42வது ஆண்டு ஆடி மாத செடல் திருவிழா, கடந்த 21ம் தேதி துவங்கியது. அன்று காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு 8:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.முக்கிய நிகழ்வாக, திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. ஏராளமான சபெண்கள் கலந்துகொண்டு, அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டனர். மாலை 6:00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் ஆகஸ்ட் 2ம் தேதி செடல் உற்சவம் நடக்கிறது. வரும் 4ம் தேதி ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து செங்கழனி மாரியம்மனுக்கு பட்டு, சீர்வரிசை பெற்று வந்து, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி